அண்ணா, துணிவு ரிலீஸ்சும் Conform பன்னிட்டாங்கனு நான் சொன்னப்ப விஜய் இதான் சொன்னார் - ஷாம் சொன்ன தகவல்.

By Siva · 6/12/2022

துணிவு படத்தின் ரிலீஸ் குறித்து விஜய் சொன்னதாக நடிகர் ஷாம் அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம். தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். 12பி படத்திற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் 12பி படத்திற்கு பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். பின் இடையில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

வாரிசு படம்:

தற்போது இவர் விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தை தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.

வாரிசு படத்தின் பாடல்:

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஷாம், பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் தான் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது.
இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார்.

நடிகர் ஷாம் அளித்த பேட்டி:

முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வாரிசு படத்தில் நடிக்கும் நடிகர் ஷாம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

https://www.youtube.com/shorts/VrhjK7ElZG0

துணிவு குறித்து விஜய் சொன்னது:

அதில் விஜய் குறித்து கூறியிருப்பது, நான் விஜய் அண்ணாவுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அண்ணா, துணிவு படத்தின் ரிலீஸ் கன்பார்ம் ஆகிவிட்டது என்று சொன்னேன். உடனே அவர், ஜாலிப்பா, வரட்டும்ப்பா. நம்ம நம்பர் தானே. அந்த படமும் நல்லா போகட்டும், நம்ம படமும் நல்லா போகட்டும் என்று சொன்னார். இந்த குணம் தான் அவரை தளபதியாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full