வாரிசு ரிசல்ட் குறித்தும் பொங்கல் வின்னர் குறித்தும் விஜய் இதை தான் சொன்னார் - ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த தில் ராஜு.

By Rajkumar · 6/4/2023

வாரிசு படம் குறித்து விஜய் சொன்னதாக படத்தின் தயாரிப்பாளர் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை கொண்ட கதை. படத்தில் மிகவும் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சரத்குமார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

வாரிசு படம்:

இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே தந்தை பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருக்கிறார்கள். ஆனால், விஜய் மட்டும் தன்னுடைய கனவு லட்சியம் தான் முக்கியம், தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜய்யிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார் சரத்குமார்.

படத்தின் கதை:

வீட்டை விட்டு வெளியேறும் விஜய் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் கட்டத்தில் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் சறுக்களை சந்திக்கிறார் சரத்குமார். இப்படி ஒரு நிலையில் விஜய் மீண்டும் வீட்டிற்கு வர தன்னுடைய தொழிலை மீண்டும் விஜய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சரத்குமார். பின்னர் சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? சரத்குமாரின் தொழில் சாம்ப்ராஜியத்தையே விஜய் மீண்டும் மீட்டெடுத்து வந்தாரா? என்பது தான் மீதி கதை.

படம் குறித்த தகவல்:

இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. அதேபோல் வாரிசு படத்தின் அன்றே நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், ரசிகர்களால் இந்த இரு படங்களும் வெற்றி படமாக அமைந்ததாக இணையத்தில் வைரல் ஆகிறது. மேலும், வாரிசு படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

தயாரிப்பாளர் தில் ராஜூ குறித்த தகவல்:

ஆனால், துணிவு படத்தின் வசூல் விவரம் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால் வாரிசு தான் பொங்கல் வின்னர் என்று விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கியிருந்தார்கள். இந்த நிலையில் வாரிசு படத்தின் ரிசல்ட் குறித்து விஜய் கூறியதாக படத்தின் தயாரிப்பாளர் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதாவது, தயாரிப்பாளர் தில்ராஜு 20 ஆண்டு காலமாக திரையுலகில் தயாரிப்பாளராக பயணித்து வருகிறார். இதனால் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் உரையாடி இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர், வாரிசு படத்தின் ரிசல்ட் குறித்து விஜய் என்ன சொன்னார் என்று கேட்டிருக்கிறார்.

விஜய் சொன்னது:

அதற்கு தில்ராஜூ கூறியது, படத்தின் ரிசல்ட் குறித்தும், அது பொங்கல் வின்னராக அமைந்தது குறித்தும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். தற்போது தில்ராஜுவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து விஜய் ரசிகர் பலரும் கொண்டாடி வருகிறார்கள். வாரிசு படத்தை அடுத்து தில்ராஜூ அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தை தயாரித்து வருகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஷங்கருடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜும் கதை எழுதி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full