அப்போதே நஸ்ரியா கணவருடன் நடித்துள்ள தளபதி - எதில் தெரியுமா?

By Rajkumar · 9/6/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், மிக பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை மாநகரம்,கைதி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார்.

https://twitter.com/TVFOfficial/status/1269995040744435712

சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது. இந்த மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பணிகள், ரிலீஸ் தேதி எல்லாம் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தளபதி விஜய்யுடன் பிரபல மலையாள நடிகர் பாஹத் பாசில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=iXcJ_Ra3RHM

அந்த புகைப்படம் இவர்கள் இருவரும் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்த போது எடுக்கப்பட்டது. மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் பாஹத் பாசில். இவர் தமிழில் வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவாகார்திகேயனுடன் நடித்துள்ளார். தற்போது இவர் மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full