அஜித்துக்கு பதிலாக நானும், விஜய்க்கு பதிலாக அவரும் நடித்தார் சீக்ரெட் சொன்ன நடிகர். வீடியோ இதோ.

By Rajkumar · 23/2/2020

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். கடந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் தல அஜித் நடிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=apSO6R7LZF4&feature=youtu.be

இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்கள். அஜித் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் பல ரொமாண்டிக் காதல் கதைகளில் நடித்து இருக்கிறார். இதனாலேயே அஜித்தை காதல் மன்னன் என்று தான் அழைத்தார்கள். அதிலும் அஜித் அவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் பல படங்கள் அவர் கையை விட்டு நழுவிச் சென்று உள்ளது. அந்த வகையில் அஜித் நடிப்பதாக இருந்த படம் ரோஜா கூட்டம்.

இந்த படத்தில் அஜித்திற்கு பதிலாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்திருந்தார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஜெய் ஆகாஷ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் ரோஜா வனம் திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர் நடிகர் ஜெய் ஆகாஷ். சமீபத்தில் நடிகர் ஜெய் ஆகாஷ் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் அஜித் குறித்தும், இப்படம் குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் கூறியது, ரோஜாக்கூட்டம் படத்தில் இரண்டு கதாநாயகர்கள் கதையை கொண்டது. முதலில் இந்த படத்தில் விஜய் மற்றும் அஜீத் இணைந்து நடிப்பதாக இயக்குநர் சசி அவர்கள் தெரிவித்து இருந்தார். ஆனால், அவர்கள் இருவரும் அப்போது படங்களில் பிஸியாக இருந்ததால் அவர்களால் நடிக்க முடியாமல் போனது. இந்த படத்தில் அஜித்துக்கு பதிலாக நானும், விஜய்க்கு பதிலாக ஸ்ரீகாந்தும் நடித்திருந்தோம் என்று கூறினார்.

behindtalkies AMP · Quick view
View full