விஜய் மற்றும் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு. வெற்றிமாறன் சொன்ன கதைக்கு ஓகே சொன்னாரா ?

By Rajkumar · 7/12/2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் இவரை வைத்து இயக்க பல்வேறு இயக்குனர்களும் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கைதி ' திரைப்படம் பிகில் திரைப்படத்தை விட மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் தற்போது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'விஜய் 64 ' படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது. இந்த படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, வெற்றிமாறன் விஜய்யிடம் ஒரு கதையை கூறினார் என்றும் அந்த கதை விஜய்க்கு பிடித்து போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, கூடிய விரைவில் விஜய் மற்றும் வெற்றிமாறன் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full