உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் - அறுவை சிகிச்சைக்கு பின் விஜய் ஆண்டனி போட்ட முதல் பதிவு.

By Arun · 2/2/2023

பிச்சைக்காரன் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனி தற்போது தனது உடல் நிலை குறித்து முதன் முறையாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். நடிகரும், இயக்குனர், பாடகர் என பன்முகங்களை கொண்ட விஜய் ஆண்டனி 2006ஆம் ஆண்டு வெளியான “கிழக்கு கடற்கரை சாலை” என்ற திரைபடத்தை மூலன் திரையில் அறிமுகமாகினர். பின்னர் நான், சலீம் , இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், டிராபிக் ராமசாமி என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அரசியல் – திரில்லர் திரைப்படமான “கோடியில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடித்து வரும் படங்கள் :

இப்படத்தை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆதமிகா நடித்திருந்தார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் அவை திரைக்கு வரவிருக்கின்றது. இப்படங்களை தவிர்த்து காக்கி, கொலை, பிச்சைக்காரன் 2, ரத்தம், வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் விபத்து :

இந்த நிலையில் தான் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தமிழ் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிச்சைக்காரன் 2 படத்தற்காக மலேசியாவில் உள்ள லங்கா தீவில் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்போது கடலில் கப்பல் காட்சி படமாக்கிக்கொண்டிருக்கும் போது இவர் ஜெட் போட்டில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்த போது மற்றொரு படகின் மீது மோதி விஜய் ஆண்டனிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட் :

மேலும் வாய்ப்பகுதியில் சேதமும் பற்களும் உடைந்துள்ளன.விபத்தில் சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் அவரை மீட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளர்னர். விஜய் ஆண்டனியின் உடல் நிலை குறித்து தெரிவித்த தயாரிப்பாளர் தனஞ்செயன் "விஜய் ஆண்டனி உடல் நிலை தேரிவருவதாகவும், அவர் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பம் லங்கவிற்கு வந்துள்ளனர்.

விஜய் ஆண்டனி பதிவு :

அவரை சென்னைக்கு அழைத்து வரும் முடிவை அவரது குடும்பம் எடுக்கும் என்றும், அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிராத்தப்போம் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் பதிவு ஒன்றை போட்டு இருக்கும் விஜய் ஆண்டனி 'அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்.வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full