இளையராஜா பணத்தாசை பிடித்தவாரா? அவர் இதை தான் கேட்கிறார் - நடிகர் விஜய் ஆண்டனி உருக்கம்
குட் பேட் அக்லி விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு சப்போர்ட் செய்து நடிகர் விஜய் ஆண்டனி தினேஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை கடின உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது சோசியல் மீடியா முழுவதும் குட் பேட் அக்லி படத்தின் செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
https://www.youtube.com/watch?v=hu8UxOkwnBI
சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி குட் பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படம்:
மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில தினங்களாகவே குட் பேட் அக்லி – இளையராஜா சர்ச்சை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த படத்தில் தன் பாடலை பயன்படுத்தியதற்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் அவர், தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
https://www.youtube.com/watch?v=M-N0MALT9Fs
இளையராஜா சர்ச்சை:
இதற்கு இது தொடர்பாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர், படத்தில் இளையராஜா பாடல்களை விதிகளின்படி அனுமதி தான் வாங்கி இருக்கிறோம். இசையில் லேபில்களிடமிருந்து வாங்கி இருக்கிறோம். அந்த உரிமைகள் அனைத்துமே லேபில்களுக்கே சொந்தமானது என்று கூறியிருந்தார். பின் இது தொடர்பாக கங்கை அமரன், காப்பி உரிமை விவகாரத்தில் நாங்கள் சர்வதேச விதிகளை தான் பின்பற்றி இருக்கிறோம்.
மைக்கேல் ஜாக்சன், தானே எழுதி நடனமாடி நடித்தவர் நடித்தார். இது அவர் கொண்டு வந்த திட்டம் தான். அவை அனைத்துமே அண்ணனின் லைப்ரரியில் சேர்ந்துவிடும்.
கங்கை அமரன் பேட்டி:
7 கோடி ரூபாய் செலவழித்து ஒரு படத்திற்கு இசையமைப்பாளரை நியமிக்கிறார்கள். அவர்கள் இசைக்கும் பாடல்களுக்கு கைதட்டல் கிடைக்காமல் எங்கள் பாடல்களுக்கு கைத்தட்டல் கிடைக்கிறது. அப்படி என்றால் எங்கள் பங்கு கிடைக்க வேண்டாமா? அவரிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்துவதால் தான் அண்ணன் கோபப்படுகிறார். எங்களுக்கு பணத்தாசை எல்லாம் இல்லை. எங்களிடம் பணம் கொட்டி கிடைக்கிறது என்று கூறியிருந்தார். இதை அடுத்து பிரேம்ஜி, அஜித்துக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=6C7WlxjoFdY
விஜய் ஆண்டனி பேட்டி:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பேட்டியில், இளையராஜா பணத்தாசை பிடித்தவர் கிடையாது. அவர் பல பேருக்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். பல ஹீரோக்களை உருவாக்கி இருக்கிறார். அவர் கேட்பது என்னவென்றால், என் பாடல்களை பயன்படுத்தும் முன்பு என்னிடம் கேளுங்கள் என்று தான் சொல்கிறார். ஒரு இசையமைப்பாளர் தன்னுடைய பாடல்களை குழந்தையை போல பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது இளையராஜா, அவருடைய பாடலை குழந்தை போல பார்க்கிறார். அவருக்கு அதில் உரிமை இல்லையா? என்று கூறியிருக்கிறார்.