எல்லா படமும் கடன்தான், வட்டி கட்டுறேன் - 'மார்கன்' பட விழாவில் விஜய் ஆண்டனி சொன்ன தகவல்

By subhashini · 27/5/2025

தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது விஜய் ஆண்டனி அவர்கள் சக்தி திருமுருகன் என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது.

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

இதை அடுத்தடுத்து பல படங்களில் விஜய் ஆண்டனி கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மார்கன். இந்த படம் ஜூன் மாதம் 27ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகிடா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது.

விஜய் ஆண்டனி சொன்னது:

இந்த விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, நான் தொடர்ந்து படங்களை தயாரித்துக் கொண்டிருப்பதை பார்த்து பலருமே என்னிடம் அதிக பணம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அது எல்லாமே கடன் தான். அதற்கு மாதம் வட்டியும் கட்டுகிறேன். இந்த படத்தினுடைய இயக்குனர் லியோவை எனக்கு பிச்சைக்காரன் படத்தின் எடிட்டிங் சமயத்தில் இருந்தே தெரியும். நான் செய்த தவறை அவர் செய்யக்கூடாது. நான் நடிக்க வந்த பிறகு இசையமைப்பதையே நிறுத்திவிட்டேன்.

தயாரிப்பு பற்றி சொன்னது:

நீங்கள் படம் இயக்கினாலும் உங்களுடைய இயக்குனர்களுடன் இணைந்து எடிட்டிங் செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நிகழ்வுகள் சில இருக்கும். அந்த வகையில் டிஷ்யூம் படத்தின் மூலமாக இயக்குனர் சசி சார் என்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். மறுபடியும் 15 ஆண்டுகள் கழித்து பிச்சைக்காரன் படத்தின் மூலமாக என்னை கதாநாயகனாக நிறுத்தினார். இப்போது மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறேன். நான் மதம் சாராத ஒரு நபர். நான் ஜாதி, மதம் உலகத்தில் இருக்கக்கூடாது என்று நினைப்பவன்.

https://www.youtube.com/watch?v=jFOjTErNWVY

படங்கள் பற்றி சொன்னது:

நான் பார்க்கும் அனைத்திலுமே ஒரு நல்ல விஷயமும், எல்லா மனிதர்களிடமும் ஒரு ஆற்றல் இருப்பதாக
நம்புபவன். எல்லோருடைய நம்பிக்கைகளையும் நான் மதிப்பேன். பிச்சைக்காரன், சலீம் படங்களில் ஆன்மீக அம்சங்கள் தானாவே வந்தது. இப்போது என்னுடைய அடுத்த படங்களுக்கு நான் தான் இசையமைக்கிறேன். இதைத் தாண்டி மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் நான் இசையமைக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களை தான் தயாரித்தேன். இந்த வருடத்தில் என்னுடைய பொருளாதார நிலைமையை பார்த்து மற்ற நடிகர்களுடைய படங்களையும் தயாரிப்பேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full