திருமண தம்பதிகளுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த அட்வைஸ் - இவரும் பாதிக்கபட்டு இருப்பாரோ ? ரசிகர்கள் போடும் கமெண்ட்ஸ்.

By Arun · 12/10/2022

ஏதாவது பிரச்சனை என்றால் கும்மியடித்து கதையை முடித்து விடுவார்கள் என்று விஜய் ஆண்டனி கூறி இருக்கும் அட்வைஸ் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினால் சினிமா உலகில் நுழைந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் முதலில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார் .

https://twitter.com/ManiGan70597663/status/1579787132507258881

இவர் கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை 7 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். பின் இவர் தன் தாய் கவனிப்பில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி சினிமா துறைக்குள் நுழைந்தார். 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

விஜய் ஆண்டனி திரைப்பயணம்:

மேலும், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார்.

https://twitter.com/Elevenstar5/status/1579780164195844096

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ரத்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பி நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய இடத்தில் நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் நடித்திருக்கின்றனர்.

https://twitter.com/TrishaKrish3/status/1579787829215105030

ரத்தம் படம்:

இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கண்ணன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது ரத்தம் படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என்று இயக்குனர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி டீவ்ட்:

அதாவது, உங்கள் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், முடிந்த வரைக்கும் உங்களுக்குள் அடித்து கொள்ளுங்கள், இல்லை விட்டு விலகி விடுங்கள், இல்லை கை கால்களில் விழுந்து சமாதானம் செய்து கொள்ளுங்கள். அடுத்தவனை மட்டும் கூப்பிடாதீர்கள். கும்மி அடித்து கதையை முடித்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி விஜய் ஆண்டனி சொல்லி இருக்கும் அட்வைஸ் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலரும் ஏன் இப்படி விஜய் ஆண்டனி பதிவிட்டு இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full