பிச்சைக்காரன் 2 - லாக் டவுனில் விஜய் ஆண்டனி எடுத்த புதிய அவதாரம்.

By Rajkumar · 31/5/2020

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக திரை உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். விஜய் ஆண்டனி அவர்கள் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். 2012-ஆம் ஆண்டு வெளிவந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார்.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த ‘கொலைகாரன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் உருவாக்கி வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் இவர் பேட்டியும் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் யாரும் எதிர்பார்க்காத அளவில் தரமாக இருக்கும். இந்த படத்தில் நிறைய ஆச்சரியங்கள், திருப்பங்களும் இருக்கும். டெக்னிக்கல் குழு பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

கூடிய விரைவில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் தகவல்கள் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தற்போது கொரோனா லாக்டவுனில் எழுதி வருகிறார் விஜய் ஆண்டனி. முதல் பாகத்தை இயக்கிய சசி தற்போது வேறு படங்களில் பிசியாக இருப்பதால் விஜய் ஆண்டனியே களத்தில் இறங்கி உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full