பிச்சைக்காரன் என்று பெயரை மட்டும் பயன்படுத்திக்கொள்ளாமல் நிஜத்திலும் விஜய் ஆன்டனி மனைவி செய்துள்ள நெகிழ்ச்சியான செயல்

By Rajkumar · 25/5/2023

பிச்சைக்காரர்களுக்கு போர்வை, விசிறி, செருப்பு போன்ற பொருட்களை விஜய் ஆண்டனி வழங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் பிச்சைக்காரன்.

இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றியடைந்தது. பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கிருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வெளியாகியிருக்கிறது. படத்தில் உலகின் ஏழாவது பணக்காரராக விஜய் குருமூர்த்தி இருக்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது.

இதை அவருடைய கூட்டாளிகள் பறிக்க நினைக்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக சத்யா சிக்கி கொள்கிறார். இவர் தன்னுடைய தங்கையை தேடி அலையும் போது தான் இவர்களிடம் சிக்கிக் கொள்கிறார். பின் ஒரே நாளில் பிச்சைக்காரன் சத்யா கோடீஸ்வரனாக மாறுகிறான். ஆனால், அந்த மாற்றம் சத்யாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் இதிலிருந்து வெளியேற சத்யா முயற்சிக்கிறார். ஆனால், அவரால் தப்பிக்க முடியவில்லை.

படத்தின் கதை:

அதற்கு பிறகு சத்யா என்ன செய்தார்? விஜய் குரு மூர்த்தியின் சொத்துக்கள் யாருக்கு போய் சேர்ந்தது? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதுவரை நல்ல வசூலை ஈட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் செய்திருக்கும் உதவி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் ஆண்டனி செய்த செயல்:

அதாவது, தற்போது விஜய் ஆண்டனி திருப்பதிக்கு சென்று இருக்கிறார். அங்கு உள்ள பிச்சைக்காரர்களுக்கு போர்வை, செருப்பு, பிளாஸ்டிக் விசிறி போன்ற பொருள்களை வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர்களுடன் நின்று விஜய் ஆண்டனி செல்பியும் எடுத்து இருக்கிறார். அங்கு விஜய் ஆண்டனியை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் குவிந்திருக்கிறது. மேலும், சென்னை ஓட்டேரி மகாலட்சுமி திரையரங்கில் 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை பிச்சைக்காரன் 2 படத்தை இலவசமாக பார்க்க வைக்க படகுழுவினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?v=miZ1O0Tl6cc&t=2s

வைரலாகும் வீடியோ:

பின் பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்து வந்த பிச்சைக்காரர்களுக்கு விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா அவர்கள் உணவு வழங்கி மகிழ்வித்து இருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, மக்களுக்காக அவர் எடுத்த படம். மக்கள் அவரை தோற்கடிக்க வில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி மனைவி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full