விஜய் ஆண்டனியின் கிரைம் திரில்லரான 'மார்கன்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 27/6/2025

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் சமீப காலமாகவே தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மார்கன். இந்த படத்தை லியோ ஜான் பால் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரிகிடா, தீப்ஷிகா, சமுத்திரக்கனி, அஜய் திஷான் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் விஜய் ஆண்டனி அவர்கள் போலீசாக இருக்கிறார். ஆரம்பத்திலேயே இவருக்கு மர்ம நபர்கள் விஷ ஊசி போடுவதால் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு போலீஸ் வேலையில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்.
பின் விஜய் ஆண்டனிக்கு நடந்தது போலவே ஒரு பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்கிறார்கள். அதனால் விஜய் ஆண்டனி அன் அபிசியல் ஆக இந்த வழக்கை விசாரிப்பதற்கு சென்னை வருகிறார். அங்கு தமிழறிவு என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விஜய் ஆண்டனி விசாரணை செய்கிறார்.

அவருமே விஜய் ஆண்டனி சந்தேகப்பட்டது போலவே செய்கிறார். தமிழறிவுக்கு எதைப் பார்த்தாலுமே அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறமை இருக்கிறது. அதற்கு பிறகு தான் உண்மை தெரிந்தது. தமிழறிவு எந்த கொலையும் செய்யவில்லை என்று தெரியவந்தது. தமிழறிவு உதவியுடனே அந்த கொலைகாரனை விஜய் ஆண்டனி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இறுதியில் விஜய் ஆண்டனி அந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா? இதனுடைய நோக்கம் என்ன? விஜய் ஆண்டனி மீண்டும் தன்னுடைய வேலையில் சேர்ந்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

ஒரு வித்தியாசமான கதைகளத்தை இயக்குனர் எடுத்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி தன்னுடைய வழக்கமான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
திரில்லர், ஆக்சன் என்று எதுவாக இருந்தாலும் அல்வா சாப்பிடுவது போல சிறப்பாக செய்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதோடு இவர் படத்தை தன்னுடைய தோளில் சுமந்து சென்றார் என்று சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் தமிழறிவு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் தனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் விஜய் ஆண்டனிக்கு பிறகு இவருடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. தன் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஷ ஊசியால் ஒரு மனிதனுடைய உடலை கருப்பாக்கி கொலை செய்வது என்று வித்தியாசமான கான்செப்ட் இயக்குனர் எடுத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விசாரணை நோக்கியே படத்தை இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். இதுவே படத்திற்கு பிளஸ் ஆக இருக்கிறது. பெரிய அளவு திரில்லர் இல்லைனாலும் போர் அடிக்காமல் இருப்பதற்காக இயக்குனர் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். குறிப்பாக வில்லனை காட்டும் காட்சி மிக சாதாரணமாக தான் இருக்கிறது. ஒரு நல்ல மெசேஜை இன்னும் கொஞ்சம் சுவாரசியத்துடன் விறுவிறுப்புடன் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் மார்கன் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

படத்தின் கதை

கிளைமாக்ஸ் ட்விஸ்ட்

விஜய் ஆண்டனி நடிப்பு

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

குறை:

கதை களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்திருக்கலாம்

ஆரம்பம் முதல் இறுதி வரை படம் பொறுமையாக நகர்கிறது

சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

சில இடங்கள் குழப்பத்தை தருகிறது

மொத்தத்தில் மார்கன் - திரில்லர் ரசிகர்களுக்கு விருப்பம்

Tamil Behind Talkies AMP · Quick view
View full