விஜய் ஆண்டனி 'நூறு சாமி' படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்ததா? இல்லையா?
விஜய் ஆண்டனி 'நூறு சாமி' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நூறு சாமி படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நூறு சாமி படம் வெளியாகி இந்தியாவில் முதல் நாளிலேயே 85 லட்சம் வசூலித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் 75 லட்சம் வரை வசூலித்து இருக்கிறது.
நூறு சாமி படம்:
உலக அளவில் இந்த படம் ஒரு கோடி வரை வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் நூறு சாமி படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நூறு சாமி படம் வெளியான நேற்று சமந்தாவின் எங்கள் தங்கள் படம் தமிழில் வெளியாகியிருக்கிறது. இந்த படம் தமிழில் மட்டும் முதல் நாள் 38 லட்சம் வசூலித்திருக்கிறது.
படத்தின் வசூல்:
மேலும், படத்தில் நாயகி ஸ்வாசிகா தன்னுடைய 26 வயதிலேயே கணவரை இழந்து விதவையாக இருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தன்னுடைய இரண்டு மகன்களையும் ரொம்பவே கஷ்டப்பட்டு ஸ்வாசிகா படிக்க வைக்கிறார். தன் கணவனை இழந்து தனியாக வாழும் ஒரு பெண் எதிர்கொள்ளும் அனைத்து விதமான கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் ஸ்வாசிகா சந்தித்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஸ்வாசிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால், இவருடைய மூத்த மகன் அஜய் இதை அறிந்து தன்னுடைய அம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். இதனால் தன்னுடைய மகன்களுக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லாததால் ஸ்வாசிகா தனியாகவே வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்.
படத்தின் கதை:
மகன்கள் இருவருமே கல்லூரிக்கு செல்லும் போது காதலிக்க தொடங்குகிறார்கள். அப்போதுதான் தன்னுடைய தாயினுடைய நியாயமான ஆசையையும் புரிந்து கொள்கிறார்கள். மகன்கள் தன்னுடைய அம்மா மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், ஸ்வாசிகா ஒத்துக் கொள்ளவில்லை. அப்போதுதான் விஜய் ஆண்டனி என்ட்ரி கொடுக்கிறார். பின் தன்னுடைய மகன்களின் வற்புறுத்ததால் ஸ்வாசிகா, விஜய் ஆண்டனி உடன் திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்கிறார். ஆனால், ஊர்மக்கள் திருமணத்தை நிறுத்த வருகிறார்கள். திட்டமிட்டபடி ஸ்வாசிகா-விஜய் ஆண்டனி திருமணம் நடந்ததா? இல்லையா? ஸ்வாசிகாவின் வாழ்க்கை என்னானது? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.