நடிகரும், இயக்குனர், பாடகர் என பன்முகங்களை கொண்ட விஜய் ஆண்டனி 2006ஆம் ஆண்டு வெளியான “கிழக்கு கடற்கரை சாலை” என்ற திரைபடத்தை மூலன் திரையில் அறிமுகமாகினர். பின்னர் நான், சலீம் , இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், டிராபிக் ராமசாமி என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அரசியல் – திரில்லர் திரைப்படமான “கோடியில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடித்து வரும் படங்கள் :

இப்படத்தை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆதமிகா நடித்திருந்தார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் அவை திரைக்கு வரவிருக்கின்றது. இப்படங்களை தவிர்த்து காக்கி, கொலை, பிச்சைக்காரன் 2, ரத்தம், வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

Advertisement

படப்பிடிப்பில் விபத்து :

இந்த நிலையில் தான் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தமிழ் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிச்சைக்காரன் 2 படத்தற்காக மலேசியாவில் உள்ள லங்கா தீவில் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்போது கடலில் கப்பல் காட்சி படமாக்கிக்கொண்டிருக்கும் போது இவர் ஜெட் போட்டில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்த போது மற்றொரு படகின் மீது மோதி விஜய் ஆண்டனிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாய்ப்பகுதியில் சேதமும் பற்களும் உடைந்துள்ளன.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட் :

விபத்தில் சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் அவரை மீட்டு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளன. இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பதிவிட்டுள்ள ட்விட்ல் “விஜய் ஆண்டனி உடல் நிலை தேரிவருவதாகவும், அவர் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பம் லங்கவிற்கு வந்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வரும் முடிவை அவரது குடும்பம் எடுக்கும் என்றும், அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிராத்தப்போம் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

அறுவை சிகிச்சை :

ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறித்தியதை அடுத்து. சென்னை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் விஜய் ஆண்டனி மலேசியாவில் உள்ள லங்கா தீவில் இருந்து கோலாலம்பூர் சென்று என்று அங்கிருந்து சென்னைக்கு திரும்பிய அவர் சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Advertisement