அந்த கதையைக் கேட்டு முடித்ததுமே அழுது விட்டேன் - மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பகிர்ந்த தகவல்

By subhashini · 1/7/2025

மார்கன் படத்தின் நன்றி விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது விஜய் ஆண்டனி அவர்கள் ‘சக்தி திருமுருகன்’ என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இதை அடுத்தடுத்து பல படங்களில் விஜய் ஆண்டனி கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் ஆண்டனி விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் மார்கன். இந்த படத்தை லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகிடா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

நன்றி விழா:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, நான் நிறைய வெற்றி, தோல்வி படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால், எனக்கு இந்த படம் ரொம்ப ஸ்பெஷல். எந்த ஒரு படமுமே ஹீரோவால் ஓடாது. கடவுளே வந்து நடித்தால் கூட அந்த ஓடாது. இயக்குனர் உடைய இயக்கமும், எழுத்தும் சரியாக இருந்தால் தான் படம் ஓடும். இல்லை என்றால் படம் ஓடாது.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

விழாவில் விஜய் ஆண்டனி:

இவை இரண்டும் சரியாக இருந்தால் தான் படமே ஓடும். அதனால் தான் நான் எந்த படத்தில் நடித்தாலும் அதற்கான அங்கீகாரத்தை இயக்குனருக்கு தான் கொடுப்பேன். இந்த படம் ஓடியதற்கு முழுக்க முழுக்க காரணம் என்னுடைய இயக்குனர் லியோ ஜான் தான். அவருடைய வேலைக்கு உண்மையாக இருந்திருக்கிறார். ஒரு இயக்குனராகவும் எடிட்டராகவும் உண்மையாக இருப்பார். இந்த படத்தில் பணியாற்றிய எல்லோருக்குமே இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

படங்கள் பற்றி பேசியது:

இதற்கு முன் நான் எவ்வளவு படம் நடித்திருந்தாலும், இனிமேல் எவ்வளவு படம் நடித்தாலும் பிச்சைக்காரன் 1 படத்திற்கு சமமாக எந்த படமும் இருக்க முடியாது. சசி சார் அந்த கதையை சொல்லி முடித்த உடனே நான் அழுதுவிட்டேன். இதுவரைக்கும் யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை அடுத்த படத்தில் சசி சார் சொல்லி இருக்கிறார். அந்த படத்தில் சசி சார் உடன் நான் பணியாற்றுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அடுத்ததாக சக்தி திருமுருகன் வெளியாகயிருக்கிறது. அதை தொடர்ந்து லாயர் படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full