சாதி, மதம் பிரிவினைகளுக்கு காரணம் இவர்கள் தான் - உண்மையை போட்டுடைத்த நடிகர் விஜய் ஆண்டனி

By subhashini · 18/9/2025

தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பின் ஆண்டனி விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் மார்கன். இந்த படத்தை லியோ ஜான் பால் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, பிரகிடா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சக்தி திருமகன் படம்:

தற்போது விஜய் ஆண்டனி அவர்கள் ‘சக்தி திருமகன்’ என்று படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார்.
இது விஜய் ஆண்டனியின் 25 வது படம். அரசியல் கதைகளத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

https://www.youtube.com/watch?v=2Du0kYl0saU

விஜய் ஆண்டனி பேட்டி:

அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, எல்லோருமே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளனும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அரசியல் தலைவர்களையே கைகாட்டி பழகி விட்டோம். சமூகம் என்பது நாம் தான். பிரச்சனையே நாம் எல்லோரும் தான். ஆனால், அதை யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். ஜாதி, மதம், மதத்தின் பேரில் சண்டை, பிரிவு எல்லாமே உருவானது மக்கள் மூலம் தான். அதனால் குற்றங்களுக்கும் நாம் தான் பொறுப்பு. இந்த மாதிரி பல கோணங்களில் இருந்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதை தான் இந்த படத்தில் பேசி இருக்கிறோம் என்றார்.

https://www.youtube.com/watch?v=GFfYYQywJEQ

அரசியல் பற்றி சொன்னது:

உடனே அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு அரசியலில் வர விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் ஆண்டனி, கண்டிப்பாக நினைத்தால் நிறைய விஷயங்களை பண்ண முடியும். ஆனால், எனக்கு அரசியலில் விருப்பமில்லை. நான் முழு நேரமும் நடிகனாக இருக்கிறேன், படங்களை தயாரிக்கிறேன், இசையமைக்கிறேன். எத்தனையோ பேர் அரசியலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை மட்டும் சிந்தித்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும். அரசியலில் விஜய்க்கு மட்டும் இன்றி எல்லோருக்கும் ஆதரவை கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full