ரயிலில் தோழிகள் முன் ஹீரோயிசம் காண்பித்து தர்ம அடி வாங்கி இருக்கும் விஜய் - அவரே சொன்ன வீடியோ.

By Rajkumar · 7/12/2022

பொதுவெளியில் தான் அசிங்கப்பட்டது குறித்து விஜய் அளித்திருக்கும் பழைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ஆஸ்தான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

https://www.youtube.com/shorts/B81vLSnuox0

வாரிசு படத்தின் பாடல்:

சமீபத்தில் தான் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். முதன் முறையாக விஜய்க்கு சிம்பு குரல் கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் அளித்த பேட்டி:

இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே விஜய் குறித்த ஏதாவது ஒரு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.அந்த வகையில் பொதுவெளியில் தான் அசிங்கப்பட்டது குறித்து விஜய் அளித்திருக்கும் பழைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பது, நான் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்களுடன் இருந்த பெண்களை அங்கு பயணித்த பயணியாளர்கள் கிண்டல் செய்திருந்தார்கள்.

அசிங்கப்பட்ட விஜய்:

இதனால் கோபமடைந்த நானும் என்னுடைய நண்பர்களும் அவர்களை அடித்து விட்டோம். அவர்கள் அடுத்த ஜங்ஷன் வருவதற்குள்ளே அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து பேசியிருக்கிறார்கள். எங்களுக்கு இது தெரியாது. உடனே 40 பேர் நாங்கள் இருந்த இடத்தில் ஏறி செமையா வச்சு செஞ்சுட்டாங்க. என்னுடைய நண்பர்கள் எல்லாம் கட்டு போட்டுக் கொண்டுதான் கீழே இறங்கினோம். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full