Vijay Awards 2018 விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வர இருந்தது இந்த 2 நடிகர்கள் தான்.!

By Ajju · 28/5/2018
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் டிவிக்கு சற்று மௌசு அதிகம் என்றே கூற வேண்டும். அதே போல வருடம் வருடம் அவர்கள் நடத்தும் விஜய் அவார்ட்ஸும் ஆரம்ப காலகட்டத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக அதில் பல குளறுபடிகள் நடந்து, நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கெல்லாம் ஒரு அவார்ட் என்று அள்ளிக்கொடுக்கப்பட்டது. இதனால் அதற்கு பல விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக விஜய் அவார்ட்ஸ் நடக்கவில்லை. சில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் அவார்ட்சை நடத்த அந்த தொலைக்காட்சி முடிவு செய்து அதற்கான தேதியையும் அறிவித்தது. ஆனால் தமிழ்நாடே பதறும் அளவிற்கு தூத்துக்குடியில் துயரங்கள் அரங்கேறின. இதனால் குறித்த தேதியில் இந்த முறை 10வது விஜய் அவார்ட்ஸ் நடக்காமல் போனது. இந்த விஜய் அவார்ட்சில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொள்வதாக இருந்தது. குறிப்பாக அரசியலுக்கு புது வருகை தந்துள்ள ரஜினியும், கமலும் கலந்துகொள்வதாக இருந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரையும் மீண்டும் ஒரே மேடையில் பார்த்திருந்தால் ரசிகர்களில் நிச்சயம் உற்சாகம் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் எப்போது விஜய் அவார்ட்ஸ் நடக்கும், அதில் இவர்கள் இருவரும் கலந்துகொள்வார்களா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full