வைரலாகும் பிகில் படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தின் ஐடி கார்டு புகைப்படம்.!

By Rajkumar · 1/7/2019

இளைய தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கபட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் கடந்த 21 ஆம் தேதியும், செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 இரவு 12 மணிக்கும் வெளியிட பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மூலம் இந்த படத்தில் விஜய் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியானது.

இதையும் பாருங்க : கணவருக்காக மதம் மாறிய பாத்திமா பாபு.! இவரது கணவர் மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா.! 

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் பெயர் மைக்கெல் என்பது அவர் அணிந்திருக்கும் ஜெர்ஸியின் மூலம் தெரிகிறது. சிலர் இளம் வயது விஜய்யின் அப்பாவாக வரும் வயதான விஜய்யின் பெயர்தான் பிகில் என்று சொல்கின்றனர்.

ஆனால், அந்த பெயரும் கால்பந்தாடும் இளம் விஜய்யின் செல்லப் பெயர்தானாம். வயதான விஜய்யின் பெயர் ராயப்பன் என்று புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மைக்கேல் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சீனியர் ஹெட் கொச்சாக நடிக்கிறார் என்பது. உறுதியாகியுள்ளது. அதற்கான சான்று இதோ.

behindtalkies AMP · Quick view
View full