#CameoBeggarVijay - அட்லீ போட்ட புகைப்படத்தால் கேலிக்கு உள்ளான விஜய். இதுதான் காரணம்.

By Arun · 23/9/2022

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், இறுதியாக இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அட்லி பதிவிட்ட புகைப்படத்தால் நடிகர் விஜய் கேலிக்கு உள்ளாகி இருக்கிறார்.

அட்லீ பிகில் படத்திற்கு பின் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவே இல்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அட்லீ தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

இதையொட்டி அட்லீ சென்னையில் பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த பார்ட்டிக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் ஷாருக்கான் இருவரும் வந்திருந்தார்கள். அவர்கள் இருவருடனும் அட்லீ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு “இதைவிட வேறென்ன வேணும்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதன் மூலம் ஜவான் திரைப்படத்தில் விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் கெளரவ வேடத்திற்காக விஜய் பிச்சை எடுக்கிறார் என்று விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து ட்விட்டரில் #CameoBeggarVijay என்ற ஹேஸ் டேக்கும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவதோடு ட்ரெண்டிங்கிலும் வந்து இருக்கிறது.

.இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். Rolex என்ற கதாபாத்திரத்தில் சில நிமிடங்களே வந்தாலும் அவரது காட்சி பெரும் பிரபலமானது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் விக்ரம் படத்தில் Rolex கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று கமன்ட் செய்ய, இதை பார்த்த விஜய் ரசிகர்களே சிலர் ஒப்புக்கொள்ளாத நிலையில் பல ட்விட்டர் வாசிகளும் விஜய் நடித்து இருந்தால் கேவலமாக இருந்து இருக்கும் என்று கேலி செய்தனர்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமாக இருந்தார். அதுவும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படத்தில் குழந்தையின் நட்சத்திரமாக நடித்திருந்தார் விஜய். இதை தொடர்ந்து சுக்கிரன், பந்தயம், இந்தியில் வெளியான ரவுடி ரத்தோர் போன்ற பல படங்களில் நடிகர் விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், இதுவரை விஜய் நடித்த எந்த ஒரு கௌரவ வேடமும் ரசிகர்கள் மனதில் பதியும்படியான ஆட்சியாக அமையப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல இயக்குனர் அட்லி ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்து ஒரு மாஸ் இயக்குனராக மாற்றி விட்டது விஜய் தான். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல்,பிகில் போன்ற மூன்று படங்களுமே மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் எப்போதும் விஜய்க்கு அட்லி நன்றி கடனுடன் இருந்து வருகிறார். இதனாலேயே நடிகர் விஜய் ஷாருக்கான் படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

behindtalkies AMP · Quick view
View full