விஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியா இருக்கும் ! சொன்னது இவரா ! புகைப்படம் உள்ளே
தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு பிறகு பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித் தான்.ரஜினி மற்றும் கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் விஜய் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
நடிகர் விஜய் சில ஆண்டுகளாகவே தனது படங்களில் அரசியல் சம்மந்தபட்ட வசனத்தை பேசுவது, மக்கள் பிரச்சனையை ஆதரித்து வசனங்களை பேசுவது போன்ற காட்சிகளை கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனால் விஜய் விரைவில் அரசியளுக்கு ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சமீபத்தில் விஜயின் அரசியல் வருகை குறித்து அவரது அப்பா எஸ்.ஏ. சி தெரிவித்த கருத்து விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த விஜயின் அப்பா எஸ்.ஏ. சி. சந்திரசேகர் விஜய் எப்போது அரசியலில் ஈடுபடுவார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர், ஆனால் தற்போது விஜய் அரசியலுக்கு வந்தால் அது மிகப்பெரிய ஜோக் ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,விஜய் அரசியலில் விரைவில் குதிர்பார் என்று நான் எதிர்பார்தேன் ஆனால் விஜயை விட மூத்தவர்களான ரஜினி மற்றும் கமல் அரசியலில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் விஜய் அரசியலுக்கு வந்தால் அது மிகப்பெரிய ஜோக் ஆகிவிடும்.
எனவே விஜய் அரசியலுக்கு வருவது இது சரியான நேரமில்லை மேலும் எதையும் தெளிவாக யோசித்து முடிவெடுப்பவர் விஜய் அதனால் அவர் என்ன முடிவெடுப்பார் என்று எனக்கு தெரியாது என்று எஸ். ஏ. சி தெரிவித்துள்ளார். இதனால் விஜயின் அரசியல் பிரவேசம் தற்போதைக்கு இல்லை என்று அருந்துள்ள விஜயின் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர்.