பல ஆண்டுகள் கழித்து மேடையில் செம குத்தாட்டம் போட்ட விஜய். வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 15/3/2020

இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சி தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்துநடித்துள்ளனர்.

https://twitter.com/TrollLegend3/status/1239212146572931072

இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது.

இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் முதன் சிங்களாக வெளியாகி இருந்தது. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அந்த பாடலை தொடர்ந்து வாத்தி கமிங் என்ற பாடல் வெளியாகி இருந்தது. மேலும் நேற்று மாலை இந்த படத்தின் மூன்றாவது பாடல் 'வாத்தி ரெய்டு' என்று வெளியாகி இருந்தது. இந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அப்பா, அம்மா இருவருமே கலந்து கொண்டார்கள். அப்போது விஜய்க்கு பிடித்த பாடல்கள் என்றால் ஒன்று மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி, மற்றொன்று காதலுக்கு மரியாதை படத்தில் ஓ பேபி என்று கூறினார்கள்.

இப்படி பலரும் பேசி முடிக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய்யின் பேச்சி துவங்கியது. பொதுவாக கடந்த சில வருடங்களாக நடைபெற்ற விழாக்களில் விஜய் சாதாரண பேண்ட் ஷர்ட்டில் தான் வருவார். ஆனால், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கோட ஷுட்டில் வந்தது பலருக்கும் கொஞ்சம் ப்ரெஷ்ஷாக தெரிந்தது. மேலும், அஜித்தை போல அஜித் போல தான் வந்துள்ளதாக கூறி இருந்தார்.

மேலும், வழக்கம் போல இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு தெறிக்கவிட்டது. ஆனால், இந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதத்தில் விஜய் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சாந்தனுவுடன் இணைந்து ஆடியிருந்தார். பல ஆண்டுகள் கழித்து மேடையில் விஜய் நடனமாடி இருந்ததால் ரசிகர் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full