தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் சாந்தனு அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து உள்ளார். நடிகர் சாந்தனு அவர்கள் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் நிறையவே இருக்கிறது. எனவே, வழக்கமான விஜய் அண்ணனை  திரையில் பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெவ்வேறு மாதிரி நடித்தார்.வழக்கமான விஜய் படமாக இருக்கக்கூடாது என்பதில் இயக்குனர் தெளிவாக இருந்தார்.அப்போது தான் ரசிகர்களிடம் அது ரீச் ஆகும் என்று அவர் நினைத்தார் என்று கூறியுள்ளார் சாந்தனு.

Advertisement

மேலும், வாத்தி கம்மிங் பாடல் குறித்து பேசிய சாந்தனு,  டெல்லி படப்பிடிப்புக்கு நான் சென்றபோது, ‘வாத்தி கம்மிங்’ என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஒருமுறை விஜய் நடனமாடி முடித்தபோது, படப்பிடிப்பு குழுவினர் கைத்தட்டி விசிலடித்தோம். காரணம், அந்தப் பாடல் காட்சியில் அவர் வெளிப்படுத்திய டான்ஸ் மற்றும் ஆட்டிடுயூட் , ஸ்டைல் எல்லாமே  வேறு மாதிரி இருந்தது என்று கூறியுள்ளார் சாந்தனு.

அதே போல இந்த லாக்டவுன் சமயத்தில் நடிகர் சாந்தனு KoCoNaKa என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த குறும்படத்தை பார்த்து விஜய் அவர்கள் சாந்தனுவை பாராட்டியுள்ளார். முதலில் நடிகர் சாந்தனு அவர்கள் இந்த குறும் படத்தின் டிரைலரை விஜய்க்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்துவிட்டு விஜய் அவர்கள் அட்ரா அட்ரா.. அதெல்லாம் உண்மை என்று கூறியிருக்கிறார் என்று கூறியுள்ளார் சாந்தனு.

Advertisement
Advertisement