ஹோலி கொண்டாடத்திற்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதியான விஜய் தேவர்கொண்டா.!

By Rajkumar · 22/3/2019


தெலுங்கு சினிமாவில் 'ரவுடி’ என்று செல்லமாக அழைக்கப்படும் டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா, பெல்லி சூப்புலு’,அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’, டாக்ஸிவாலா’ உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தமிழ்’ ரசிகர்களைப் பெற்றவர். விஜய் தேவரகொண்டா. ‘நோட்டா’ படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் துவங்கினர்.

அதே போல பிரபல பத்திரிகை நிறுவனமானன போர்ப்ஸ் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் மணர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயர் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று ஹோலி பண்டிகையை கொண்டாடிய விஜய், தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஓய்வு எடுக்கக் கூட நேரமில்லையாம். இந்த நிலையில், திடீரென்று காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்ஹா செய்தியால் விஜய் தேவர்கொண்டாவின் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்த்துள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாக உள்ள டியர் காம்ரேட் படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரது ரசிகர்கள் ரவுடி என்ற இவருடைய செல்லப் பெயரை பைக் நம்பர் பிலேட்களில் பொருத்தி போலீசில் சிக்கியதும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

behindtalkies AMP · Quick view
View full