சமந்தாவுடன் வீடியோ கால்,மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த கொண்டா. கேலி செய்த நெட்டிசன்கள்.

By Arun · 28/8/2023

விஜய் தேவர்கொண்டாவும் சமந்தாவும் பேசிய வீடியோ கால் தற்போது ரசிகர்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற இடையில் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

சமந்தா திரைப்பயணம்:

இதனை அடுத்து கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

குஷி திரைப்படம் :

சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று இருந்தது. அந்த விழாவில் சமந்தாவை அலேக்காக தூக்கி விஜய் தேவர்கொண்டா கொடுத்த ரொமான்டிக் போஸ் வைரலானது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை படக்குழுவினர் விதவிதமாக ப்ரோமோட் செய்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் தான் சமந்தா லண்டன் சென்றுவிட்டார்.

விஜய் தேவர்கொண்டாவுடன் வீடியோ கால் :

இப்படி ஒரு நிலையில் சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் வீடியோகாலில் பேசிய வீடியோ ஒன்றை விஜய் தேவர்கொண்டா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் இது வீடியோ கால் போல் இல்லை இருவரும் தனித்தனியே பேசி ரெகார்ட் செய்த வீடியோவை எடிட் செய்து இப்படி செய்து இருக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர். அதிலும் சமந்தா அணிந்து இருக்கும் கண்ணாடியில் அவர் ரேக்கார்ட் செய்வது மிகவும் அப்பட்டமாக தெரிவதையும் நெட்டிசன்கள் சுட்டிகாட்டி வருகின்றனர்

இருவரின் முந்தைய படம் :

இதையெல்லாம் குஷி படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இவர்கள் இருவரும் இப்படி செய்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், சமந்தாவின் கடைசி படமான சகுந்தலம் படமும் விஜய் தேவர்கொண்டாவின் கடைசி படமான லைகர் படமும் மாபெரும் தோல்விப்படமாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, குஷி திரைப்படம் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தாவிற்கு முக்கியப்படமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full