கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவர் கொண்டா -ராஷ்மிகாவின் திருமணம் - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 26/2/2026

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த நடிகர் விஜய் தேவர் கொண்டாவை தான் காதலிக்கிறார்.

இருவரும் டேட்டிங் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதற்கு ஏற்ப இருவருமே பல இடங்களில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு சில மேடைகளில் கூட விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாக மறைமுகமாக ராஷ்மிகா உறுதி செய்திருந்தார். இதை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா உடைய நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது.

ராஷ்மிகா காதல் கிசுகிசு:

இருந்தாலும் இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். இதை அடுத்து ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா திருமணம் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானில் தான் நடைபெறுகிறது. இதில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இருவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா திருமணம்:

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமே வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் ராஷ்மிகா- விஜய் தேவர் கொண்ட இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் ராஷ்மிகா- விஜய் தேவர் கொண்டா திருமணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் முதலில் வாட்டர் வாலிபால் விளையாடப்பட்டது.

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

திருமணம் பற்றிய தகவல்:

இரண்டாம் நாள் விரோஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதற்குப்பின் சங்கீத், மெஹந்தி என்று பல சடங்குகள் நடைபெற்றது. இன்று ஒரே நாளில் ராஷ்மிகா- விஜய் தேவர் கொண்டா இரண்டு முறை திருமணம் செய்து இருக்கிறார்கள். காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா பாரம்பரிய திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும்தான் கலந்து கொள்கிறார்கள். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full