விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படம் மகுடத்தை பிடித்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

By subhashini · 1/8/2025

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கிங்டம். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஜெர்சி படத்திற்கு பின் இயக்குனர் கௌதம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தை சூர்ய தேவர நாகவம்சி தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் இளம் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் 1920 இல் தங்கத்திற்காக ஒரு டிரைப் குழுவை வெள்ளைக்காரர்கள் அழித்து விடுகிறார்கள். அதில் இருந்து சில பெண்கள், குழந்தைகள் மட்டும் தப்பிக்கிறார்கள். பின் இவர்கள் தங்களுடைய அரசனின் உத்தரவால் ஸ்ரீலங்காவில் ஒரு தீவில் தஞ்சம் அடைகிறார்கள். அதற்குப் பிறகு அவர்களால் தங்களுடைய சொந்த நாட்டிற்கு வரவே முடியவில்லை. இதனால் மக்கள் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் தங்களுடைய அரசன் காப்பாற்றுவான் என்றெல்லாம் நினைக்கிறார்கள்.

அதற்குப்பின் 90 காலகட்டத்தை காண்கிறார்கள். ஹீரோ விஜய் தேவரகொண்டா கான்ஸ்டபிள் ஆக வேலை பார்க்கிறார். அதே நேரத்தில் சின்ன வயதில் தன்னுடைய அம்மாவை குடித்துவிட்டு தன்னுடைய அப்பா அடித்து கொடுமைப்படுகிறார். இதை எல்லாம் பார்த்து தாங்கி கொள்ள முடியாத விஜய் தேவரகொண்டாவின் அண்ணா அப்பாவை கொன்று விடுகிறார். அதற்குப் பின் விஜய் தேவரகொண்டாவின் அண்ணா எங்கேயோ சென்று விடுகிறார்.

சிறுவயதிலிருந்தே தன்னுடைய அண்ணாவை விஜய் தேவரகொண்டார் தேடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும்போது தான் ஹீரோவுக்கு தன் அண்ணனையே கண்டுபிடிக்க வேண்டும் என்று அண்டர் கவர் ஆபரேஷன் கிடைக்கிறது. காரணம் விஜய் தேவரகொண்டாவின் அண்ணா, ஸ்ரீலங்காவில் ஒரு பெரிய மாபியா குரூப்புக்கு தலைவராக இருக்கிறார். இதனால் ஸ்ரீலங்கா சென்று அவரை கைது செய்ய வேண்டும் என்று விஜய் தேவரகொண்டாவிற்கு உத்தரவு வருகிறது.

இறுதியில் விஜய் தேவரகொண்டா தன் அண்ணனை காப்பாற்றினாரா? எதனால் ஹீரோ அண்ணா மாபியா தலைவன் ஆனார்? அந்த மக்களை காப்பாற்ற அரசன் வந்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தன்னுடைய அண்ணனை தேடி செல்லும் காட்சிகள் எல்லாம் பிரமாதமாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா கேரியரிலேயே இந்த படம் ஒரு சிறந்த படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
படத்தில் விஜய் தேவரகொண்டாவின் அண்ணாவாக சத்யதேவ் நடித்திருக்கிறார். அவர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆக்சன் மட்டும் இல்லாமல் எமோஷனல் ஆகவும் படத்தை இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தினுடைய முதல் பாதி ஸ்பை கதை போல செல்கிறது. அதனால் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. இடைவெளிக்கு பிறகு தங்கம் கடத்தல், குற்றவாளியை பிடிக்கும் காட்சி என்று என்று செல்கிறது. ஆனால், விறுவிறுப்பு தான் கொஞ்சம் குறைவு.

இரண்டாம் பாகத்தில் இயக்குனர் எமோஷனலாக கொடுத்திருக்கிறார். அதுதான் பார்வையாளர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணன்- தம்பி பாசம், போலீஸ் கடமை, எமோஷனல் என்று இயக்குனர் கதையை நகர்த்திருக்கிறார். படத்தினுடைய பின்னணி இசை நன்றாக இருக்கிறது. டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக கிங்டம் இருக்கிறது.

நிறை:

விஜய் தேவரகொண்டா நடிப்பு

மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முதல் பாதி ஓகே

கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது

ஒளிப்பதிவு, இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதையை பொறுமையாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார்

கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.

நிறைய எமோஷனல் காட்சிகள்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் கிங்டம் - மகுடத்தை பிடிக்க தவிக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full