தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் தமிழ் சினிமா உலகில் என்றென்றும் இளைய தளபதியாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த அளவிற்கு இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் பட்டைய கிளப்பி இருந்தது. இந்நிலையில் விஜய் பயந்து விட்டார், கோழை என தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசி உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைராலாகி வருகிறது.

சமீபகாலமாகவே விஜய் படம் என்றாலே பல சர்ச்சைகளும், சலசலப்புகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் உள்ளன. அதுவும் தலைவா படத்தில் இருந்து தான் இந்த பிரச்சனைகள் எழுந்தது. அதற்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல், கத்தி போன்ற பல படங்கள் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை கூறியதால் எதிர் மறையாக பல பிரச்சினைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் மெர்சல் படத்தின் போது விஜய் ஜிஎஸ்டி குறித்து பேசி இருந்தார். அது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement

இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சூட்டிங் போது நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இது குறித்து தமிழ் சினிமா உலகின் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசி இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நடிகர் விஜய் உண்மையிலேயே பயந்து விட்டார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து அவர் மத்திய அரசாங்கத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். இதனால் விஜய்யை பயமுறுத்தினால் ஒட்டுமொத்த சினிமா உலகமே பயந்து விடும் என்று நினைத்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் நெய்வேலியில் இருந்து விஜய்யை கட்டாயப்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்து ஐ டிரைட் நடத்தினார்கள்.

பின் எல்லாம் முடிந்த பிறகு எதுவும் இல்லை எதுவும் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள். அப்போது விஜய் மன உளைச்சலுக்கு ஆளானார். விஜய்யை பயமுறுத்தினால் சினிமா ஒட்டுமொத்த சினிமா உலகமே பயந்து விடும் என்று நினைத்து தான் இதெல்லாம் செய்தார்கள். அதற்குப் பிறகு படங்களில் விஜய் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து எந்த ஒரு கருத்தையும் பேசாமல் நடித்து வருகிறார். ஏனென்றால் விஜய் ஒரு கோடீஸ்வரர். எவன் ஒருவன் அதிகம் பணம் சேர்கிறானோ அவனுக்கு ஆண்மை போய்விடுகிறது. பணக்காரர்கள் நமக்கு எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சினை என்று ஒதுங்கிப் போவார்கள். ஆனால், நாங்கள் ஏழைகள். நாங்கள் தான் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் குரல்கொடுப்போம் எதிர்த்து நிற்போம் என்று தயாரிப்பாளர் ராஜன் ஆவேசமாக பேட்டியில் பேசி இருந்தார்.

Advertisement
Advertisement