குவைத் நாட்டில் நடந்த விபத்து குறித்து த.வெ.க தலைவர் விஜய் உருக்கமான பேச்சு

By subhashini · 13/6/2024

குவைத் நாட்டில் நடந்த கோர தீ விபத்து குறித்து நடிகர் விஜய் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் குவைத் நாட்டில் நடந்த தீ விபத்து குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குவைத் நாட்டில் அகமது மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கிறது.

இந்த குடியிருப்பில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த கோர சம்பவத்தில் 49 பேர் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். பல பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த விபத்தில் இன்னும் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பலருமே சோசியல் மீடியாவில் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

குவைத் தீ விபத்து:

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

விஜய் பதிவு:

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என்று கூறி இருக்கிறார். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது.

கோட் படம்:

இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியான லியோ படம் மிக பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் அரசியல்:

மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மோகன், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது கோட் படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதை அடுத்து விஜய் கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு பின் இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full