ஆர்யாவை 'Beast' என்று சொன்னதால் திட்டிய விஜய் ரசிகர் - அஞ்சனா கணவர் கொடுத்த செருப்படி பதில்.

By Rajkumar · 10/7/2021

தன்னை சீரியலில் வாய்ப்பு தேட சொன்ன விஜய் ரசிகருக்கு கயல் பட நடிகர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் 'கயல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சந்திரமௌலி. கயல் படத்திற்கு பின்னர் ரூபாய் படத்தில் நடித்து இருந்தார். தமிழில் இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார். மேலும், இவர் பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினியான அஞ்சனாவை திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ஆர்யா நடித்து இருக்கும் சார்பட்டா பரம்பரை குறித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் சார்பட்டா.

இந்த படத்தில் சூர்யா தான் நடிக்க இருந்ததாக கூட தகவல் வெளியானது இது குறித்து பேசிய ரஞ்சித், இந்த படத்திற்காக பல பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது சூர்யா உட்பட எனக்கு ஆர்யாவை மெட்ராஸ் பட சமயத்தில் இருந்தே தெரியும். அவர் என்னிடம் தனக்காக ஒரு கதையை தயார் செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால்தான் இந்த படம் மூலமாக நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம் என்று கூறி இருந்தார். இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் ஆர்யாவின் நடிப்பு படத்துக்கு பெரும்பலம் சேர்த்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தை வாங்க பல OTT நிறுவனமும் போட்டி போட்டுள்ளது. இறுதியில் இந்த படத்தை பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறது Amazon நிறுவனம். மேலும், இந்த திரைப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்து இருந்தார் ஆர்யா.

ஆர்யாவின் இந்த பதிவிற்கு ட்வீட் செய்த கயல் ரங்கன், பக்காவா Beast, சார்பட்டா படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். ஆர்யாவை 'பீஸ்ட்' என்று குறிப்பிட்டதால் கடுப்பான விஜய் ரசிகர் ஒருவர், டேய், Beast தளபதி படத்தோடு தலைப்பு, அந்த வார்த்தையை பயன்படுத்ததே. மூடிட்டு ஒழுங்கா சீரியல்லயாவது சான்ஸ் கிடைக்குமான்னு பாரு டா என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த சந்திரன், சிறந்த திரைப்படங்களுடன் அதிக கேலிகளும் வருகிறது. ignore நெகடிவிட்டி, வெள்ளைக்காரன் DP (அந்த நபரின் profileலில் இருந்ததை குறிப்பிட்டுள்ளார்) பயப்படறயா குமாரு, தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கு தாழ்மையுடன் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் வாழ்வதர்க்கு சீரியல் தேவையில்லை. என்னுடைய படிப்பு போதும். புரியலல ? போய் படிச்சி, வாழ்க்கைல உறுப்புடு என்று நச்சுனு பதிலடி கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full