பட்டமளிப்பு விழாவில் 'வாரிசு' விஜய்யின் ஸ்டைலில் முத்தமிடும் மாணவர்- தமன் கொடுத்த ரியாக்‌ஷன்

By Manikandan · 6/3/2023

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தளபதி 67 பெயரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்ற சொல்லியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வருகின்றனர் அதற்கான வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

தனி ஸ்டைல் :

இந்நிலையில் எப்போதுமே தனக்கென ஒரு மேனரிஸத்தையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல ஒரு தனித்துவமான ஸ்டாலியும் தன்னுடைய படங்களில் பின்பற்றி வருவார். அந்த வகையில் பபுள் கம்களை இரண்டு முறை வாயில் போடும் ஸ்டாலியை முன்னதாக நடித்த பிகில் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் செய்திருந்தார். இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் காற்றில் முத்தம் கொடுக்கும் ஸ்டாலிலை விஜய் பயன்படுத்தினார். அது தற்போது விஜய் ரசிகர்களின் விருப்பமான ஸ்டாலிலாக மாறியுள்ளது.

வைரல் வீடியோ :

இப்படியொரு நிலையில் தான் விஜய் ரசிகர் ஒருவர் பட்டமளிக்கும் விழாவில் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் விஜய்யுடைய அந்த பிரத்யேக ஸ்டைய்லை பயன்படுத்தி இருந்தார். இதனை பார்த்த மேடையில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளகி இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த விடியோவை பகிர்ந்த ரசிகர்கள் "என்னடா அநியாயம் பன்றிங்க" என்று பதிவிட்டு வரும் நிலையில். வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து தன்னுடைய மகிச்சியை தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full