தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் சம ஊதியத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும், ஒருசில பள்ளிகள் திறக்காமல் பூட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில் உள்ள ஒருபள்ளியில் ஆசிரியர் இல்லாமல் தவித்து வந்த மாணவர்களுக்கு விஜய் ரசிகர்கள் சொந்த செலவில் ஆசிரியர்களை பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையும் படியுங்க : எப்படி கூசாம போராட்டம் பண்ண தோணுது.! ஆசிரியர்களை வம்பிழுக்கும் கஸ்தூரி.! 

Advertisement

திருப்பூர் சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரையில் 94 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் வராத நிலையில் பூட்டப்படும் தருவாயில் இருந்தது.

இதற்கு மாற்று வழியை கண்ட அந்த ஊரின் விஜய் ரசிகர்கள்
இரண்டு ஆசிரியர்களை அப்பள்ளியில் நியமித்து பாடம் நடத்த ஏற்பாடு செய்தனர். அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க ரசிகர்களே இணைந்து பணம் சேர்த்துள்ளனர்.விஜய் ரசிகர்களின் இந்த செயல் அந்த பகுதி மக்களால் பாராட்டபட்டு வருகிறது.

Advertisement
Advertisement