அஜித் பிறந்தநாளுக்கு விஜய் ரசிகர்கள் நடு ரோட்டில் செய்த ரகளை.! வைரலாகும் வீடியோ.!
நேற்று (மே 1) அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். சமூக வலைதளம் முழுக்க அஜித்திற்கு பிறந்தநாள் தெரிவித்து பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்த்தனர்.
https://twitter.com/ghillisuresh_22/status/1123770992529215489
அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். அதே போல அஜித் ரசிகர்கள் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லங்களுக்கு தங்களது உதவியை செய்த்தனர். மேலும், அஜித்தின் வீட்டின் முன்பும் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது.
இந்த நிலையில் நேற்று அஜித்தின் பிறந்தநாளுக்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் சிலர் நடு ரோட்டில் விஜய்யின் புகைப்படம் அடங்கிய பேனரை பிடித்துக்கொண்டு பாலபிஷேகம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.