சென்னையில் விஜய்க்கு சிலை - அதுவும் எந்த இடத்தில் வைத்துள்ளார்கள் பாருங்க.

By Rajkumar · 25/7/2021

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த மாதம் தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக விஜய் ரசிகர்கள் படு ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது தெரியும்.

சமீபத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தால் சில நாட்களாக ட்ரெண்டிங் ஸ்டாராக இருந்தார் விஜய். இப்படி ஒரு விஜய் மீது தீவிர பற்று கொண்டுள்ள அவரின் ரசிகர்கள் பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் அவருக்காக சிலை வைத்து அசத்தியுள்ளனர். இதே பகுதியில் தான் விஜய்யின் ஒரு வீடும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும், விஜய்க்கு சிலை வைத்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தான் கன்னியாகுமரியில் இருக்கும் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இளையதளபதி விஜயின் மெழுகு சிலை அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே இந்தி நடிகர் ஷாருக்கான், மகாத்மாகாந்தி, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான், இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் , இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்திய பிரதமர் மோடி போன்ற பல்வேறு பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full