பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.! விஜய் ரசிகர்கள் செய்த விசயத்தை பாருங்க.!

By Rajkumar · 5/1/2019

தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளையும், பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்று 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதனால் மளிகை கடை முதல் பேட்டி கடை வரை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை நாடி வருகின்றனர்.

https://twitter.com/SLVFC_Official/status/1080999236567625728

அதே போல பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக பேப்பர் பை, துணிப்பை, பாக்கு மட்டையால் ஆனா பைகள் போன்ற மாற்று பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விளக்களித்துள்ளது. இதனால் பேப்பர் பை, துணிப்பை போன்ற பைகளின் தேவைகளும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்ட துணிப்பைகளை கடை கடைகளாக கொடுத்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவர்கள் விஜய்யின் பிறந்தநாளின் போதும் பட ரிலீஸின் போது திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.
மேலும் சமூக சேவைகளும் அவ்வப்போது செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full