விஜய் 63 படப்பிடிப்பிடிற்கு இடையே ஷாப்பிங் சென்ற விஜய்.! வைரலாகும் புகைப்படம்.!

By Rajkumar · 22/4/2019

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவதாக முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி. 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நடிகர்கள் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை பற்றிய பல்வேறு வதந்திகள் அடிக்கடி வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படுவதாக இருந்த இந்த படம் அதற்கு முன்பாகவாக அதாவது வரும் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் விஜய்யின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் விஜய் சிவப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு கலர் கோர்ட் போட்டுக் கொண்டு செம சீனாக ஷாப்பிங் சென்றுள்ளார் அந்த புகைப்படம் தான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full