தல கெட்டப்பில் தளபதி? கசிந்தது விஜய் '63' படத்தில் விஜய்யின் கெட்டப்.!

By Rajkumar · 1/2/2019

சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இவர்களோடு டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்களும் நடிக்க இருக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் முதல் கட்ட பணிகளுக்கான சென்னையில் உள்ள பிரபல பின்னி மில்லில் தான் செட் அமைக்கபட முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய்யின் கெட்டப் தான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்  நடிகர் விஜய் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தளபதி 63 படத்தின் கெட்டப்பில் விஜய் வந்துள்ளார்.

https://twitter.com/mmr_creations/status/1091255815539908609

அதில் மெர்சல் படத்தில் இருக்கும் வெற்றிமாறன் போன்ற கெட்டப்பில் இருக்கிறார் விஜய். எனவே, இந்த படத்திலும் சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலில் விஜய் கலக்க இருக்கிறாரா என்று எதிர்பார்க்கபடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full