மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய். வெளியான புகைப்படம்.

By Rajkumar · 15/3/2020

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் தாயின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றியிருப்பது அங்கிருப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் தனெக்கென ஒரு ரசிகர் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார்

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்துநடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் முதன் சிங்களாக வெளியாகி இருந்தது. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அந்த பாடலை தொடர்ந்து வாத்தி கமிங் என்ற பாடல் வெளியாகி இருந்தது. மேலும் நேற்று மாலை இந்த படத்தின் மூன்றாவது பாடல் 'வாத்தி ரெய்டு' என்று வெளியாகி இருந்தது.

இந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு தீம் மியூசிக் பாடலுடன் சேர்த்து 8 பாடல்களாம். இதில் மிகபெரிய சர்ப்ரைஸ் என்னவென்றால் இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், சந்தோஷ் நாராயணன் என்று மூன்று இசையமைப்பாளர்கள் பாடியுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கோட் சூடடில் வந்திருந்தார்.

மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பெற்றோர்களான எஸ் ஏ சந்திரசேகரும் அவரது மனைவி ஷோபாவும் வந்திருந்தனர். இந்த விழாவின் போது மேடையில் பேசிய விஜய்யின்  தாய், தந்தையிடம் உங்கள் ஆசை என்ன என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேட்க, விஜயைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார். உடனே மேடைக்குச் சென்று தனது பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் நடிகர் விஜய்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full