விஜய் தான் No.1 - மீண்டும்  தெளிவான விளக்கம் கொடுத்த தில் ராஜூ - விடமாட்டாரு போலயே.

By Manikandan · 29/12/2022

விஜய் நடித்திருக்கும் வாரிசு மற்றும் அஜித் நடித்திருக்கும் துணிவு படங்களை குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு கூறியிருந்த கருத்திற்கு சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. தமிழ் சினிமா உலகில் பல வருகிறது. காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

https://twitter.com/SaramBadass/status/1608387051573084161

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது.

மேலும் இப்படடம் வரும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. அதோடு தமிழ் நாட்டின் மற்றொரு முன்னணி நடிகரான அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் வாரிசு படத்துடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது. அதாவது விஜய் மற்றும் அஜித் பல காலங்களுக்கு பிறகு ஒன்றாக மோதிக்கொள்ள இருக்கின்றனர். இதனால் இரு நடிகர்களின் ராசிகர்கள் மத்தியில் பெரும் ஏதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் கொடுத்திருந்த போட்டியில் சர்ச்சைக்குள்ளான கருத்தை கூறியிருந்தார்.

அதில் அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் தான் முன்னிலையில் இருக்கிறார். இது வியாபாரம். இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்கம் ஒதுக்குவது ஏற்க முடியாது. இது குறித்து நான் உதயநிதி ஸ்டாலின் இடம் பேச போகிறேன் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலரும் கன்னடம் தெரிவித்தனர். அதற்கு பிறகு அந்த சர்ச்சைக்கு விளக்கவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கேலி செய்யும் வண்ணம் நம்பர் 1, நம்பர் 1என்று மேடையில் பேசியிருந்தார் அது மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அந்த சர்ச்சைக்கு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.

https://twitter.com/David_Bilaaaaa/status/1608412345004601345

அவர் கூறியது `விஜய் மற்றும் அஜித் என இருவருக்கும் சமமான திரையரங்குகள் தமிழகத்தில் ஒதுக்கப்படுகின்றன. இருந்தாலும் அதிகம் வசூல் செய்வது என்னவோ என்னுடைய ஹீரோ விஜய் படம் தான். அதனால் தான் நான் வாரிசு படத்திற்கு அதிகமான திரையரங்குகளை ஒதுக்குங்கள் என்று கேட்டிருந்தேன். சினிமாவில் ஒரு நடிகருக்கு மதிப்பு கிடைப்பது அவரின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வசூலை பொறுத்துதான்.

அதோடு தளபதி விஜய் நடித்திருந்த கடந்த 6 படங்களும் 60 கோடிக்கும் மேல் தமிழகத்தில் மட்டும் நல்ல வசூல் செய்திருந்தது. விஜய் நடித்த படங்கள் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் கண்டிப்பாக நல்ல வசூலை படக்குழுவிற்கு தருகிறது. இதனால் மற்ற எல்லா நடிகர்களையும் விட விஜய் தான் பெரிய ஸ்டார் என்று அந்த பேட்டியில் வாரிசு சர்ச்சை குறித்து விளக்கமாக பேசியிருந்தார் தயாரிப்பாளர் தில் ராஜு.

Tamil Behind Talkies AMP · Quick view
View full