எஸ்.ஜே.சூர்யா அவர வச்சு எடுக்க போறாராம்னு விஜய்கிட்ட சொன்னேன், போய் வந்து பாத்தா அந்த படத்துல விஜய் நடிப்பதா அறிவிப்பு வந்துச்சி - குஷி பட சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர்.

By Siva · 19/12/2023

குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் அளித்திருக்கும் பேட்டி தான் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் நடிகராகவதற்கு முன்பு மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கிய வாலி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட்டை அளித்தார் எஸ் ஜே சூர்யா. அதன் பின் இவர் குஷி படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படம் 2000 ஆண்டு வெளியானது. காதல் கதையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார்.

தேனப்பன் பேட்டி:

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதோடு நடிகர் விஜயின் கேரியரிலேயே திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது. இந்த நிலையில் இந்த பட வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டியில் கூறியிருப்பது, நான் குஷி படத்துக்கு முன்பே விஜய் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்து இருந்தேன். அப்போது அவர் மின்சார கண்ணா படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்தினுடைய சூட்டிங் சுவிட்சர்லாவில் எடுக்கப்பட்டிருந்தது.

விஜய் குறித்து சொன்னது:

அப்போது விஜய் சார் என்னிடம், வாலி படம் சூப்பராக இருக்கு. அந்த இயக்குனர் எஸ் ஜே சூர்யாவை சந்தித்து கதை இருக்கா? என்று கேட்க சொன்னார். பின் நான் எஸ் ஜே சூர்யாவை சந்தித்து பேசினேன். அப்போது எஸ்.ஜே சூர்யா, ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் ஒரு படம் பண்ண போவதாக சொன்னார். அதில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க போறார் என்று சொன்னார். ரத்தத்திரம் என்பதால் நானும் விஜய் இவ்வாறு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதை சொன்னேன்.

குஷி பட வாய்ப்பு:

அவரும் சரி பேசிக்கலாம் என்று சொன்னார். இதை அடுத்து ஒரு வாரம் நான் லண்டனுக்கு சுற்றுலா சென்று விட்டேன். சுற்றுலா முடிந்து திரும்பி வந்த பிறகு ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்க போறார் என்று அறிவிப்பு வந்தது. அதற்குப் பிறகுதான் பிரபுதேவாவுக்கு பதில் விஜய் குஷி படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரிய வந்தது என்று கூறியிருந்தார்.

விஜய் நடிக்கும் படம்:

மேலும், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த படம் லியோ. இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் மிகப் பெரிய அளவில் வசூலையும் செய்திருக்கிறது. இதனை அடுத்து தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் சினேகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full