பிரபல நடிகரின் ட்ரைலரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய்..!யாருடைய படம் தெரியுமா..!

By Rajkumar · 19/12/2018

தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் பல இளம் கலைஞர்களின் படத்தை கண்டு பாராட்டியுள்ளார். நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடித்த படத்தை பார்த்துக் கூட அவரே போன் செய்து பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் தன்னை வைத்து படம் இயக்கிய எஸ் ஜே சூர்யாவின் படத்தின் ட்ரைலரை பார்த்து சிரித்துள்ளார் விஜய்.  எஸ் ஜே சூர்யா,நடிகர் விஜய்நடித்த குஷி படத்தை இயக்கியவர் . மேலும், மெர்சல் படத்திலும் விஜய்யின் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இதையும் படியுங்க: விஜய் மற்றும் அஜித் எப்படி பட்டவர்கள்..! இருவரையும் இயக்கிய பிரபல இயக்குனர் ..!

நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்த 'நெஞ்சம்மறப்பதில்லை' என்ற படத்தின் ட்ரைலரை பார்த்து நடிகர் விஜய் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். மேலும், அதை எஸ் ஜே சூர்யாவிற்கு இரவு 11 மணிக்கு போன் செய்து கூறியுள்ளார். இந்த தகவலை எஸ் ஜே சூர்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா, நந்திதா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

Tamil Behind Talkies AMP · Quick view
View full