விஜய் டூப்பே வேணாம்னு சொன்னார்னு சொன்னாரே லோக்கி - அப்போ இது என்ன? கேலிக்கு உள்ளான விஜய்.
லியோ படத்தில் விஜய்க்கு டூப் போட்டவர் குறித்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
https://twitter.com/Rohith9878/status/1710689558143332681
இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. லியோ பட வெற்றியை சிறப்பாக கொண்டாட செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் முடிவு செய்தது. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தி இருக்கிறார்கள். இந்த விழாவில் விஜய், லோகேஷ், திரிஷா உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மேலும், லியோ படத்தின் விழாவில் விஜய் பல விஷயங்களை பேசியிருந்தார். விழாவில் பிரபலங்கள் பலரும் லியோ படம் குறித்தும், விஜய் குறித்தும் பல படம் விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் லியோ படத்தில் விஜய்க்கு டூப் போட்டவர் குறித்த தகவல் தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது, லியோ படத்தின் ப்ரோமோஷன் போதே லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு இந்த படத்தில் டூப் போடவில்லை.
https://twitter.com/realrawrathesh1/status/1726999498390687851
டூப் போடாமல் தான் அவன் நடித்திருக்கிறார் என்றெல்லாம் கூறியிருந்தார். ஆனால், தற்போது லியோ படத்தில் விஜய்க்கு டூப் போட்டவர் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பெரும்பாலும் விஜய் படங்களில் இவர் தான் டூப் போட்டு இருக்கிறார். குறிப்பாக, பிகில், பீஸ்ட், வாரிசு போன்ற படங்களில் விஜய்க்கு இவர் தான் டூப் போட்டு இருக்கிறார். இவர் லியோ படத்தில் டூப் போடவில்லை என்றால் லியோ படபிடிப்பில் இவருக்கு என்ன வேலை.
மேலும், லோகேஷ் கனகராஜ் விமர்சித்து பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தற்போது அவருடைய புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது தற்போது நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
https://twitter.com/rajinivasan2345/status/1710637983140077718
இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் பூஜைகள் சென்னையில் நடைபெற்றது. மேலும், இந்த படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் ஆக்ஷன் சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு வித்தியாசமான கான்செப்ட்டை வைத்து இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.