அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் போட்ட உத்தரவு - செய்து முடித்த நிர்வாகிகள். அரசியல் என்ட்ரிக்கு வித்தா ?

By subhashini · 14/4/2023

தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டு அதில் 129 பேர் வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு அறிவித்து இருந்தது.

விஜய் மக்கள் இயக்கம்:

வழக்கம் போல் இதில் எதிர் கட்சி, ஆளும் கட்சி, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டி இட்டார்கள். அதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து இருந்தார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்களை அடிக்கடி சந்தித்து இருந்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள்.

விஜய்யின் அரசியல்:

இதற்காக சினிமாவின் மூலம் ஏராளமான ரசிகர்களை விஜய் தன்வசம் படுத்தி வருகிறார் என்றும், அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் அதற்கான வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை:

அப்போது அம்பேத்கர் பிறந்த நாள் அன்று ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து கூறியிருந்தார். அந்த வகையில் இன்று தமிழக முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, புஸ்ஸி என் ஆனந்த் விக்கிரவாண்டியில் நடைபெற்ற விழாவில் அரசியல் கட்சியினர் இணையாக ஊர்வலம் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இருக்கிறார். இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full