விரைவில் அதற்கு ஏற்பட்டு செய்யுங்கள்..!பிரபல திரையரங்க உரிமையாளரை நேரில் சந்தித்த விஜய்..!

By Rajkumar · 27/12/2018

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பல்வேறு சாதனைகளை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து 50 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில் விஜய் திருநெல்வேலிக்கு சென்று பிரபல ராம் முத்துராம் திரையரங்கின் உரிமையாளர் ராமை சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராம் மதுரம் திரையரங்க உரிமையாளர்,
‘முத்துராம் திரையரங்கில் ஒரு நாள் தனது படத்தை ரசிகர்களுடன்  கண்டுகளிக்க நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்ததாக’ குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.

https://twitter.com/RamCinemas/status/1077889334936653824

இந்த திரையரங்கில் தான் நெல்லை மாவட்ட தலைமை விஜய் தொண்டரணி சார்பாக, ‘சர்கார்’ திரைப்படத்தை பார்க்க வந்த 500 மேற்பட்ட ரசிங்கர்களுக்கு, விஜய் ரசிகர்கள் சார்பாக டெங்கு ஒழிப்பிற்காக நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full