அத பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது,என்கிட்டே எதுவும் கேக்காநீங்க - சொந்த மகன் குறித்து விஜய் அம்மா சொன்ன விஷயம்.

By Manikandan · 27/12/2022

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யை அறிமுகம் செய்து வைத்தவரே அவரின் தந்தை எஸ். ஏ சந்திரசேகர் தான். இவர் பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் மேலும் விஜகாந்தின் தொடக்க சினிமா காலத்தில் இவரின் பல படங்களில் நடித்திருந்தார். அதே போல விஜய்யின் தாய் ஷோபாவும் தன்னுடைய மகனான விஜயுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி சினிமாவில் பிரபலமான இந்த அழகிய குடும்பம் பிரிந்து விட்டதாக தகவல்கள் சமீபத்தில் செய்தி ஓன்று வெளியாகியிருந்தது.

https://www.youtube.com/shorts/Zcb7t83b064

இந்த பிரிவு ஏற்பட்டதற்கு காரணம் அவரது தந்தை தன்னுடைய மகன் விஜய் பெயரை சொல்லி அரசியல் நடத்துவதினால் தான் நடந்தது என்று கூறப்பட்டது. இதனால் விஜய் அவரின் தந்தை மீது கோவமாக இருப்பதாகவும் இதற்கும் குடும்ப விஷியத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ் ஏ சந்திரசேகர் கொண்டாடி இருந்தார். அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் நெட்டிசன்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்தனர்.

இப்படிபட்ட நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய்யை காண ஏராளமான ரசிகர்களும், படத்தில் நடித்த ராஷ்மிகா, பிரபு, சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் விஜய் இரண்டு வருடங்களுக்கு பிறகு ரசிகர்களுடன் பேசுவதினால் குட்டி ஸ்டோரி கேட்பதற்கும் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.

https://www.youtube.com/watch?v=d4Q8uBwBw20

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய்யின் தந்தை எஸ் ஏ சி மற்றும் அவரது தாயார் சோபாவும் வந்து இருந்தனர். சமீப காலமாகவே விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் பிரச்சனை அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விழாவில் விஜய் தன்னுடைய தாய் தந்தையை கண்டதும் உடனடியாக சென்று ஆரத்தழுவி பாசத்தை வெளிப்படுத்தி வெளியில் கூறப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தளபதி விஜய்.

இந்த நிலையில் விஜய்யின் தயார் ஷோபா காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அங்கு அவர் சாமியை வணக்ங்கிவிட்டு வரும் போது அவரை செய்தி ஊடகங்கள் சூழ்ந்து கொண்டனர். அவரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டன அதற்கு அவர் நான் உலகில் உள்ள எல்லா மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகிறேன் என்று கூறினார்.

https://www.youtube.com/watch?v=jZ-O2BvSSMg

மேலும் விஜய்யின் அடுத்த படம் குறித்த கேள்விக்கு `வாரிசு படமே இன்னும் வெளியாக நிலையில் எனக்கு எப்படி அடுத்த படம் பற்றித்தெரியும். இந்த படம் குடும்ப பாங்கான படம் என்று தான் எனக்கு தெரியும் அதை தவிர வேறு எதுவும் தெரியாது. அதோடு விஜய் அரசியல் வருவது எனக்கோ என்னுடைய கனவருக்கோ எதுவும் தெரியாது என்றும் அந்த நேரத்தில் கூறியிருந்தார். விஜய்க்கும் அவரது குடுப்பதினாருக்கும் சமீபத்தில் சண்டை என்று தகவல் வெளியான நிலையில் இவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full