ஒரு அம்மாவாக வாழ்த்துறேன் - மகாநடிகை போட்டியாளரை பாராட்டிய நடிகர் விஜய் அம்மா

By subhashini · 31/1/2025

சமீபகாலமாகவே சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலுமே வித்தியாசமான கதைகளத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். பெரும்பாலும், ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே விஜய் டிவிக்கு ஒரு தனி மவுஸ் உண்டு. இதை அடுத்து மற்ற சேனல்களுமே ரியாலிட்டி நிகழ்ச்சிகளை புதிய கான்செப்டில் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழில் புதிதாக மகா நடிகை என்ற நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் ஆண்டனி தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கதாநாயகி நிகழ்ச்சியின் பிரதிபலிப்பாக இருக்கு என்று கூறி இருந்தார்கள்.

மகாநடிகை:

விஜய் டிவியில் யார் அடுத்த கதாநாயகி என்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கே எஸ் ரவிக்குமார், ராதிகா சரத்குமார் இருந்தார்கள். இது கதாநாயகி தேடும் பயணம். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இதில் கலந்து கொண்ட பல பேருக்கு சினிமா, சீரியல் என்று வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தான் ஜீ தமிழில் மகாநடிகை ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியில் நடிகை சரிதா, நடிகை அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மொத்தம் பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

ப்ரோமோ வீடியோ:

தற்போது 5 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த நிகழ்ச்சியினுடைய கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ப்ரோமோக்கள் தான் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகியிருப்பவர் தான் ஹேமதி. இவர் ஒருவருடைய காதலை மறக்க, அந்த நபர் அவருடைய முகத்தில் ஆசிட் வீசி சிதைத்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=UJM7J8WY-ZU&t=40s

விஜய் அம்மா பாராட்டு:

இருந்தும் அவர் சாதிக்க துடிக்கிறார். இவருடைய நடிப்பை பார்த்து நடுவர்கள் எல்லோருமே மெய்சிலிரித்து பாராட்டி வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய நடிப்பை பாராட்டி விஜய் உடைய தாயார் சோபா சந்திரசேகர், உங்களை நான் பெரிய நடிகையாக திரையில் பார்க்கணும் என்று ஒரு அம்மாவாக வாழ்த்துகிறேன் என்று அவருக்கு நிகழ்ச்சியிலேயே சர்ப்ரைஸாக வீடியோ மூலம் பேசி இருக்கிறார். தற்போது இது தொடர்பான புரோமோ வீடியோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full