இவ ஒரு பைத்தியம். புலி பட நடிகையை கிண்டல் செய்த நபர்.அதற்க்கு அவரின் பதிலை பாருங்க.

By Rajkumar · 5/3/2020

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்க்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடித்த "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா " என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார்.

https://www.instagram.com/p/B9TXUChnVFR/

புலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்தில் நடித்த பிறகு தனது நடிப்பை பலரும் பாராட்டுவார்கள் என்று நந்திதா நம்பிக்கையுடன் இருக்கிறாராம். இந்த படத்தை இயக்கும் இயக்குனர் கீதா ராஜ்புட் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை நந்திதா வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர்,இவ ஒரு பைத்தியம், பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே இப்படி பண்ணிட்டு இருக்கா என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த நந்திதா போடா லூசு என்று பதிவிட்டுள்ளார் நந்திதா இதுபோன்று பதில் அளிப்பது புதிதான விஷயமல்ல கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நந்திதாவுக்கு படு ஆபாசமாக ரசிகர் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார் அதனை நந்திதா ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full