விஜய் 63 யில் விஜய்யின் பெயர் மைக்கேல் இல்லையாம்.! ஆனால், தர லோக்கலான பெயர் இது தான்.!

By Rajkumar · 10/6/2019

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரபட்டாளங்களும் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்க : கிரிக்கெட் பார்க்க சென்ற விஜய் மல்லையா.! திருடன் திருடன் என்று கத்தி வெளியேற்றிய இந்தியர்கள்.! வைரல் வீடியோ.! 

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இந்த படம். மேலும், இந்த படத்தின் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியளராக நடிக்கிறார். இந்த படத்தில் விஜயின் பெயர் மைக்கேல் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்யின் பெயர் மைக்கேல் இல்லை என்று தற்போது சில தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய், பிகில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெயரும் தர லோக்கலாக இருப்பதால் இந்த பெயரும் ரசிகர்களுக்கு பிடித்துபோய்விட்டது.

அதே போல இதுவரை படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு சின்ன அப்டேட்டும் வரவில்லை, இதனால் ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் தரிசனம் கிடைப்பதால் கொண்டாடுகிறார்கள். மேலும், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளன்று இந்த படத்தை பற்றிய மிகப்பெரிய அப்டேட் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிரிபார்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full