விஜய்யின் பெயரை 100 கோடி பேர் பயன்படுத்தி புதிய சாதனை..!இதில் கூட அவர் தான் கிங்..!

By Rajkumar · 29/12/2018

இந்த ஆண்டு நடிகர் விஜய்க்கு ஒரு வெற்றிகரமான ஆண்டு என்று தான் கூற வேண்டும். மெர்சல் படத்திற்கான சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது, சர்கார் படம் செய்த சாதனைகள் என்று பல சிறப்பான நிகழ்வுகள் விஜய்க்கு அமைந்தது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர்,ட்ரைலர் என்று அனைத்தையும் hashtag பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்தனர்.

இந்த நிலையில் இன்றைய இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்-களில் ஒன்றான டிக் டாக்கில் நடிகர் விஜய் என்ற ஹேஸ்டேக்கை இதுவரை 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சர்கார் படம் பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி வசூலில் சாதனை படைத்தது. மேலும் விஜய்யின் 63-வது பட அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது,தற்போது டிக் டாக்கிலும் தளபதி ட்ரெண்டிங் என்றவுடன் மிகந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full