மீண்டும் Wig கேலிக்கு உள்ளான விஜய் - அடிக்கடி மாறி வரும் விஜய்யின் ஹேர் ஸ்டைல். எது தான் உண்மை ?

By Rajkumar · 24/5/2022

சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது.இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66 படப்பிடிப்பு :

மேலும், இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜா நடைபெற்றது. இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஹைதிராபாத்தில் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய விஜய் :

சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் விஜய் புதிய Wig வைத்து இருக்கிறார் என்று கேலி செய்ய துவங்கி இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் விஜய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் மாஸ்டர் பட ஹேர் ஸ்டைலில் இருந்தார் விஜய்.

அடிக்கடி மாறி வரும் ஹேர் ஸ்டைல் :

இதை தொடர்ந்து விஜய் 66 படத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் நடிகர் விஜய் வேறு விதமான ஹேர் ஸ்டைலில் இருந்தார். ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோவில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் படு வித்யாசமாக இருக்கிறது. மேலும், இதில் அவர் Wig வைத்து இருப்பது போல அப்பட்டமாக தெரிகிறது.

தொடர் கேலிக்கு உள்ளாகும் ஹேர் ஸ்டைல்:

விஜய்யின் முதல் படம் துவங்கி தற்போது வரை அவரது உருவத்தை பற்றிய பல விமர்சங்கள் எழுந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு படங்களில் ஒரிஜினல் முடி வைத்து நடிக்கவில்லை என்ற பல கேலி கிண்டல் இருக்கத்தான் செய்து வருகிறது. அதிலும் இறுதியாக வெளியான பீஸ்ட் படத்தின் போது சன் டிவியில் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார் விஜய். அதில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் வித்யாசமாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் சிலரே கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full